வைகோ வழியில் பாதல்! ராஜீவ் கொலையாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து, சில மாதங்களுக்கு முன் தமிழகத்தில் எழுச்சிப் போராட்டம் வெடித்தது. இவர்களின் தண்டனையைக் குறைப்பது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. இதற்கிடையே, பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியான்ந்த் சிங் கொல்லப்பட்ட வழக்கில் ரஜோனாவுக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து கடந்த வாரம், பஞ்சாப்பில் பந்த் நடந்தது. தமிழகத்தில் மரண தண்டனைக்கு எதிராக வைகோ போராடி வருவதை அறிந்து, அவரைச் சந்திப்பதற்காக அடுத்த மாதம் தமிழகம் வருகிறார், பஞ்சாப் முதல்வராக இருக்கும் பாதல். அமைச்சர்களுக்கு அட்வைஸ்! புதிய பஸ்கள் தொடக்க விழா முடிந்ததும், அமைச்சர்கள் எல்லோரையும் கார்டனுக்கு அழைத்திருக்கிறார் ஜெயலலிதா. பதறியடித்துப் போனார்கள் அமைச்சர்கள். ''சசிகலா மீண்டும் வந்து விட்டதால் அவருக்கு நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று நினைத்து விடாதீர்கள். சசிகலாவோ, அவருடைய உறவுகளோ சொல்லி யாராவது காரியம் சாதிக்க நினைத்தால்,. . .