நீர் முற்றுகையில் தமிழ்நாடு!
நாட்டின் ஊழல் விகிதம் ஏறுவதுபோல, இந்திய விவசாயிகளின் தற்கொலைக் கணக்கும் அதிகரித்துக்கொண்டேபோகிறது. கடந்த 16 ஆண்டுகளில் இந்தியாவில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் 2.5 லட்சம் பேர். உண்மையில் இவை தற்கொலைகள் அல்ல! இந்திய அரசின் தவறான விவசாயக் கொள்கையால் 'கொலைசெய்யப்பட்டவர்கள்’ இவர்கள்! தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட கணக்குப்படி 1995-2010 கால கட்டத்தில் நாடு முழுவதும் இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஒரு மாபெரும் பேரழிவில்கூட இவ்வளவு பேர் இறந்திருக்க வாய்ப்பு இல்லை. ''விவசாயிகளின் மரணம் என்பது யதேச்சையானது அல்ல. அவர்களை வறுமைக்குள் தள்ளி உயிரைப் போக்கிக்கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலைக்கு ஆளாக்கும் அரசே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்!'' என்று கொதிக்கிறார்கள் விவசாய சங்கப் பிரதிநிதிகள். மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம். . .