அடிப்படை உலோகங்கள் வரும் வாரத்தில் எப்படி வர்த்தகமாகும் என வெல்த் டெரிவேட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரமணனிடம் கேட்டோம். ''கடந்த வாரத்தில் காப்பர் விலை இறங்கக் காரணம் டெக்னிக்கல் பிரேக் அவுட். அதாவது, உலகப் பொருளாதாரச் சூழ்நிலைகள் காரணமாக இந்த விலை இறக்கம் இருந்தது. ஆனால், சீனாவின் தயாரிப்பு புள்ளிவிவரம் நன்றாக வந்திருக்கிறது. லண்டன் மெட்டல் இன்வென்டரி தொடர்ந்து குறைந்து வருகிறது. அத்துடன் சீனாவில் மானிட்டரி பாலிசி மூலம் அங்கு வட்டி விகிதங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடிப்படை உலோகங்களில் காப்பர் மட்டுமே தற்போது நல்ல நிலையில் உள்ளதால் அதை வாங்கலாம். ஒரு கிலோ காப்பர் 440 ரூபாய்க்கு மேலே போனால் வாங்குவதற்கு நல்ல வாய்ப்பு. இலக்கு விலையாக 450 ரூபாயும், சப்போர்ட் லெவல் 428, 424 ரூபாயும் கொண்டு வாங்கலாம்.