கரன்சி டிரேடிங்: ஆன்லைனில் செய்யலாமா?
இன்ஃப்ரா துறை இறக்கத்தில் இருக்கும் இந்த சமயத்தில் என்.ஏ.வி. குறைவாக இருக்கும் அந்த துறையின் பங்குகளிலும், ஃபண்டுகளிலும் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்யலாமா? குமரவேல், சிதம்பரம். ஏ.எஸ்.ராமகிருஷ்ணன், இயக்குநர், ரிலையபிள் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச். ''2008-க்கு பிறகு கடும் சரிவை சந்தித்த இன்ஃப்ரா துறை தற்போது வரையிலும் அதிலிருந்து மீளவில்லை. குறிப்பாக, கடந்த பதினைந்து மாதங்களாகவே இறக்கத்தில்தான் உள்ளது. தற்போது, என்.ஏ.வி. குறைவாக உள்ள நிலையில் முதலீடு செய்யலாம். என்றாலும், அடுத்த இரண்டு வருடங்களுக்கு அந்த முதலீட்டில் வளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது. அடுத்த ஐந்தாண்டு திட்டத்தில் இன்ஃப்ரா துறைக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு இருப்பதால் இரண்டு, மூன்று வருடங் களுக்குப் பிறகு இன்ஃப்ரா துறையின் பங்குகளும் வளர் வதற்கு வாய்ப்புள்ளது. நீண்ட கால முதலீடு. . .