''மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பற்றி எல்லோருக்கும் தெரியும் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், சமீபத்தில் எனது அலுவலகத்திற்கு ஒரு போன் வந்தது. போனில் பேசிய பெண், மியூச்சுவல் ஃபண்டில் பணம் போட்டால் பாதுகாப்பாக இருக்குமா? எங்களைப் போன்ற சாதாரண மனிதர்கள் நல்ல ஃபண்டுகளை எப்படி கண்டுபிடிப்பது என்று கேட்டார். அப்போது தான் மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய அடிப்படை விஷயங்கள் இன்னும் பலருக்கும் போய் சேரவில்லை என்பதைப் புரிந்து கொண்டேன்'' என்கிறார் நிதி ஆலோசகர் ரமேஷ் பட். மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய அடிப்படை விஷயங்களை விளக்கிச் சொல்லவும் செய்தார். மியூச்சுவல் ஃபண்ட் என்பது..! பங்கில் நேரடியாக முதலீடு செய்ய முடியாதவர்கள், விஷயம் தெரிந்த ஒருவர் மூலம் முதலீடு செய்வதுதான் மியூச்சுவல் ஃபண்ட். நாம் தரும் பணத்தை ஃபண்டை நிர்வகிக்கும் மேனேஜர் பங்கு களில் முதலீடு செய்வார். இப்படி முதலீடு செய்யப்படும் பணம், பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத் திற்கு ஏற்ப வருமானம் தரும். . . .
This is your profile with all details about you including
PAN card, cell phone number etc.