இன்று... ஒன்று... நன்று...!
''விகடன் வாசகர்களுக்கு, தமிழருவி மணியனின் இதயம் நிறைந்த வணக்கங்கள்! ஊருக்கு நல்லது சொன்ன நான், இப்போது உங்களுடன் தனிப்பட்ட முறையில் சில நல்ல விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். எதைச் செய்கிறோமோ, அதுவாகவே மாறுவது எப்படி? ஒரு ஜென் கதை உங்களுக்குப் புரியவைக்கும். சந்நிதியில் கடவுளைக் கண் திறந்து வணங்க வேண்டுமா... இல்லை, கண்களை மூடித் தியானிக்க வேண்டுமா? அதற்கு விடை சொல்கிறேன். கூடுதலாக கடவுளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களையும் விளக்குகிறேன். உலக இன்பங்களைத் தேடுவது ஒரு துருவம். உலக இன்பங்களைத் துறப்பது மற்றொரு துருவம். இந்த இரண்டு துருவங்களில் எதில் உண்மையான வாழ்வின் இன்பம் இருக்கிறது? வாருங் கள்... வழிகாட்டுகிறேன்! புத்தன் 'நடுப் பாதையில் நட!’ என்று ஏன் சொன்னான்? தன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பது வளர்ச்சிக்கு உதவுமா? அப்படிப் பார்ப்பது சரியா? இறைவன் படைப்பில் மனித இனத்துக்கு மட்டுமே சிரிக்கத் தெரிந்தது ஏன்? சிரிக்கத் தெரிந்த அதே. . .