தலையங்கம் - மனதில் உறுதி வேண்டும்!
மிக உயர்ந்த மலை உச்சியில் இருந்த ஆலயத்தில் இறைவனைத் தரிசிக்க பக்தர்களோடு ஒரு முதியவரும் கிளம்பினார். பக்தர்களில் ஒருவர் வியப்போடு கேட்டார், ''உங்களால் எப்படி மலை ஏற முடியும்?'' முதியவர் சொன்னார்: ''அது சுலபம். என் மனம் எப்போதோ உச்சியில் உள்ள இறைவனை அடைந்துவிட்டது. மிச்சம் போக வேண்டியது இந்த உடல் மட்டும்தானே?'' பல கனவுகளோடு பாடுபட்டுப் படித்து, பன்னிரண்டாம் வகுப்பு வரை முடித்து, சிறப்பான மதிப்பெண்களும் பெற்று, கல்லூரிப் படிப்பில் நுழையும் மாணவர்களில் சிலர் - பாடத்தின் கடுமை தாங்காமலும் காதல் போன்ற கவனச் சிதறல்களாலும் தற்கொலை முடிவை நாடும் செய்திகள் இந்தக் கதையைத்தான் நினைவூட்டுகின்றன. அதிலும் பல்லாயிரம் மாணவர்களின் கனவாக விளங்கும் ஐ.ஐ.டி., கிண்டி பொறியியல் கல்லூரி போன்றவற்றில் இடம் பிடிக்கும் அளவுக்கு முன்னேறியவர்கள், அடுத்த கட்டத்தை முடிக்க முடியாமல் திணறிப்போய் நம்பிக்கை இழப்பது மிகப் பெரிய வேதனை! ஒரு பயணத்தில் இலக்குக்கு எவ்வளவு மதிப்பு உண்டோ, அதே. . .