எப்போது சந்தித்தாலும் கௌதமிடம் கேட்க மட்டும் ஏராளமான கேள்விகள் இருக்கும். எதிர்பார்க்காத ஆங்கிளில் பேட்டிக்குத் தலைப்பும் சிக்கும்! இதோ இப்போதும்... ‘‘ ‘நீதானே என் பொன்வசந்தம்’ மீண்டும் கௌதம் காதல் ஸ்பெஷலா?’’ ‘‘சிம்பிள் காதல் கதை. இந்தக் காதலுக்குக் காதலர்களே எதிரி. அவங்க ஒண்ணு சேருவாங்களா இல்லையா? அதான் படம். ரொம்ப சந்தோஷமான படம். ‘இப்படியான படம்தான் நாங்க நிறையப் பார்த்திருக்கோமே’னு நீங்க சொன்னா, இந்தப் படத்தையும் மிஸ் பண்ணாமப் பாருங்கனு சொல்வேன். காரணம், ராஜா சார் மியூஸிக். படத்தில் அதுதான் ஹைலைட்!’’ ‘‘இசையமைப்பாளர் யார் என்பதையே சஸ்பென்ஸா வெச்சிருக்கும் அளவுக்கு இளையராஜா கௌதம் கூட்டணியில் அப்படி என்ன ஸ்பெஷல்?’’ ‘‘ஒவ்வொரு படம் தொடங்கும்போதும் ‘இதுக்கு ராஜா சார்தான் மியூஸிக்’னு யோசிப்பேன். ஆனா, அமையாது. இந்தப் படத்துக்கு. . .