இந்தியாவின் மிக உயரிய 'பத்ம’ விருது... அத்தி பூத்தாற்போல் எப்போதாவது விவசாயிகளுக்கும் வழங்கப்படுவது உண்டு. அந்த வகையில் இப்போது, புதுச்சேரி மாநிலம், கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடபதி, பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு இருக்கிறார்! ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில், ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் கையால் விருது பெற்றுத் திரும்பி இருக்கும் வெங்கடபதிக்கு வாழ்த்துச் சொல்லிப் பேசினோம். ''நான், பாரம்பரியமான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். வீட்டுக்கு ஒரே பிள்ளைங்கறதால செல்லமாத்தான் வளர்ந்தேன். நாலாம் கிளாஸுக்கு மேல படிப்பு ஏறல. ஜாலியா சுத்திக்கிட்டிருந்த என்னோட போக்கை மாத்துறதுக்காக, 16 வயசுலேயே கல்யாணம் முடிச்சு வைச்சுட்டாங்க. 19 வயசுலதான் எங்க குடும்பத்துக்குச் சொந்தமா இருந்த நிலத்துல கால் வெச்சேன். நெல்லு, கடலைனு வழக்கமான பயிர்கள்ல லாபமே இல்லை. லாபம் தேட. . .