கண்ணைத் தோண்டி... பின்புறத்தில் குத்தி...
ஒரு பத்திரிகையாளரின் மரணம் அதிகப் படியான பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அப்படி ஒரு கொடூரமான கொலை! கும்மிடிப்பூண்டிக்கு அருகில் உள்ளது மாதர் பாக்கம். அங்கே, மிகக்கொடூரமான முறையில் கொல்லப்பட்ட உடல் ஒன்று ஏப்ரல் 5-ம் தேதி அன்று கண்டு எடுக்கப்பட்டது. வலது கண் தோண்டப்பட்டு, அந்த மனிதனின் பின்பக்கம் முழுவதும் குத்திக் கிழிக்கப்பட்டுக் கிடந்தது. அந்த உடலைக் கண்டு காவல்துறையினரே அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். அப்படிச் சித்ரவதை செய்து கொல்லப்பட்டவர், ஒரு நிருபர் என்று அடையாளம் காணப்படவே, திகிலில் இருக்கிறது மீடியா உலகம். 'மக்கள் கோட்டை’ எனும் தமிழ் வாரப் புலனாய்வு இதழ் மற்றும் 'பிரஜா சக்தி’ எனும் தெலுங்கு நாளிதழுக்கும் ஏரியா நிருபராக இருந்த விநயன் என்பவர்தான் கொலையானவர். அவரது அண்ணன் சுப்புலுவிடம் பேசினோம். ''என். . .