தமிழ்நாடு சட்டசபையில் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதால், திருவண்ணாமலையில் தீப்பந்தமாக வெளுத்து வாங்கிவிட்டார் விஜயகாந்த். ''இப்படி ஒவ்வொரு ஊரா போய் கேப்டன் பேசினாலே போதும்... கட்சியை வளர்த்துடலாம்'' என்று அவரது கட்சித் தொண்டர்களை துள்ளி எழவைத்துவிட்டது விஜயகாந்த்தின் ஆர்ப்பாட்டம்! பால், பஸ் மற்றும் மின் கட்டணங்களை வாபஸ் பெறக் கோரி, தே.மு.தி.க. சார்பில் திருவண்ணாமலையில் கடந்த சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. காலை 10 மணிக்கு வரவேண்டிய விஜயகாந்த், இரண்டு மணி நேரம் லேட். வந்த உடனேயே மைக் பிடித்து விட்டார். ''இந்த ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலைக்கு மட்டும் அல்ல... தமிழ்நாடு முழுவதும் நிலவும் பவர்கட்டுக்கான ஆர்ப்பாட்டம். பவர் கட் என்றால் அவங்களோட 'பவர் கட்’ இல்லை, கரன்ட் கட். எனக்கும் சிவன் ஸ்தலங்களுக்கும் சம்பந்தம் இருக்கு. நான் மதுரையில். . .