பரவுகிறது 'பச்சோந்தி' வைரஸ்!
கோடையின் வெப்பம் மக்களை ஒருபுறம் வாட்டி வதைக்க... மறுபுறம் பன்றிக் காய்ச்சல் பீதியும் மக்களை மிரட்டுகிறது. இன்ஃபுளூயன்ஸா 'ஹெச்1 என்1’ என்ற வகை வைரஸ் கிருமிகளால் ... பன்றிக் காய்ச்சல் ஏற்படுகிறது. வழக்கமாக குளிர் காலத்தில்தான் இந்த வகைக் காய்ச்சல் மனிதர்களைத் தாக்கும். இப்போது, கோடைக் காலத்திலும் பரவத் தொடங்கி இருக்கிறது. ''பச்சோந்தி போல தனது கேரக்டரையே அந்த வைரஸ் மாற்றிக் கொண்டுவிட்டது. அதன் ஜீன்களில் ஏதோ மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதனால்தான், குளிர்காலத்தில் இருந்து கோடை காலத் துக்குத் தாவி விட்டது'' என்கிறார் சுகாதாரத் துறையின் உயர் அதிகாரி ஒருவர். 90 வருடங்களுக்கு முன்பே மெக்ஸிகோ நாட்டில் பன்றிகளிடம் வைரஸ் தாக்குதல் தென்பட்டது. பின்னர், அந்த வைரஸ் மனிதர்களையும் தாக்கியது. அதை அடுத்து, அந்த நாட்டு மக்களில் பலரும். . .