விதர்பா விவசாயிகள் தற்கொலை ஏன்?
தலித் செயற்பாட்டாளர்கள் இடையே பிரபலமானவர், மேலாண்மைக் கல்வியியலில் முனைவர் பட்டம் பெற்ற எழுத்தாளர் ஆனந்த் டெல்டும்டே. கயர்லாஞ்ஜியில் நடந்த வன்கொடுமை பற்றி இவர் எழுதிய புத்தகம், சிறந்த ஆவணமாக திகழ்கிறது. ஜனநாயக உரிமைகள் பாதுகாப்புக் குழு, இந்திய மக்களுக்கான மனித உரிமைக்குழு ஆகிய வற்றில் உறுப்பினர். தோழர் அனுராதா காண்டியின் புத்தக வெளியீட்டுக்காக சென்னை வந்திருந்த அவரைச் சந்தித்தோம். ''என் மாணவப் பருவத்தில் இருந்தே அனுராதா காண்டியை எனக்குத் தெரியும். மாணவராக அவர் இருந்த போதே, சாதி எதிர்ப்பு, தொழிற்சங்கப் போராட்டங்களில் பங்கேற்றார். சிவில் உரிமைப் போராட்டங்களிலும் இறங்கியவர். அதன் பிறகு, மாவோயிஸ்ட் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அப்போது முதல் எனக்கும் அவருக்குமான தொடர்பு விட்டுப்போயிற்று. சில காலங்களுக்குப் பிறகு, அவர் எழுத ஆரம்பித்து இருந்தார்.. . .