மிஸ்டர் கழுகு: சசிகலா கையில் டேஞ்சர் கடிதங்கள்!
''நலந்தானா?'' என்று நாம் கேட்டதும், கழுகார் முகத்தில் புன்னகை. ''போயஸ் கார்டனுக்குள் சசிகலா வசித்தபோது இருந்த அறை இன்னமும் அவருக்காகத் தயார் ஆகவில்லை என்பதால், தற்காலிகமாக வேறு ஓர் அறையில் இருக்கிறார். இந்த இடைப்பட்ட காலத்தில், ஆன்மிக ஈடுபாடு முன்பு இருந்ததைவிட இன்னும் அதிகம் ஆகிவிட்டது. எப்போதும் பக்திப் பாட்டுப் புத்தகங்களுடன்தான் இருக்கிறார் சசிகலா. முன்பெல்லாம் மந்திரிகள், அதிகாரிகள் வந்தால் அவர்களைப் பார்ப்பது சசிகலாவின் வழக்கம். இப்போது அந்த மாதிரியான காட்சிகள் குறைந்து விட்டன. 'கார்டனுக்குள் எனக்கு உதவி செய்வதற்குத்தான் வந்துள்ளார். அதுபற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதும் இல்லை... அவரது உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டியதும் இல்லை’ என்று, அமைச்சர்களுக்கு முதல் அமைச்சர் கட்டளை இட்டுள்ளதால், மந்திரிகள் தரப்பில் பதற்றம் நிறைந்த சூழ்நிலை இல்லை. ஆனால்..?'' ''ஆனால் போட்டாலே... சிக்கலாச்சே?''. . .