அழகிரி வீட்டில் நெஃபர்டாரி!
''எனக்கு எப்பவும் ஏதாவது துறுதுறுனு பண்ணிக்கிட்டே இருக்கணும். பெயின்டிங், ஸ்கெட்ச், கிரியேட்டிவ்னு பண்ணிட்டே இருப்பேன். சின்ன வயசு... விளையாட்டுத்தனமா இருந்துட்டோம். இப்போ நாலு பேருக்கு நல்லது செய்யும் நிலைமையில் இருக்கிறப்போ, நம்ம சக்தியை அதுக்குச் செலவழிக்கலாமேனு தோணுச்சு. அதான் இந்தச் சமூக சேவகி அவதார்!'' - அழகாகச் சிரிக்கிறார் அனுஷா துரை தயாநிதி. அழகிரி யின் மருமகள். தி.மு.க. ஆளும் கட்சியாக இருந்தபோது அழகிரி வீட்டுக்குள் மருமகளா கக் காலெடுத்துவைத்தவர், இப்போதைய அரசியல் களேபரச் சூழ்நிலையில் வீட்டை விட்டு வெளியே வந்திருக்கிறார். ''என்ன திடீர்னு சமூக சேவை ஆர்வம்?'' ''சும்மாதான்! டவுன் சின்ட்ரோம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நலனுக்காக ஒரு அமைப்பு நடத்துறார் என் கசின் அரவிந்த். அந்தக் குழந்தைகளுக்குப் பாடம் நடத்துவது ரொம்பவே சிரமம். ஒரு. . .