WWW - வருங்காலத் தொழில்நுட்பம்
ஃபேஸ்புக் மீது யாஹூ வழக்குத் தொடர்ந்ததன் காரணத்தை இந்த வாரம் கொஞ்சம் ஆழமாகப் பார்க்கலாம். அந்தக் காரணம், லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன், உங்கள் முகவரிப் புத்தகம்! உங்கள் நண்பர்களின் தொடர்புத் தகவல்கள், அலை/தொலைபேசி எண்கள், அவர்களது மின்னஞ்சல்கள்கொண்ட முகவரிப் புத்தகத்தை உங்கள் வசதிக்காக அலைபேசியிலோ, மின்னஞ்சல் தளத் திலோ வைத்திருப்பீர்கள்தானே? அதன் மீது பெரும்பாலான இணைய நிறுவனங் களுக்கு ரொம்பவும் விருப்பம். 2009-ம் வருடத்தில் யாஹூ தளம், அதன் மின்னஞ்சல் உள்ளிட்ட அதன் பல்வேறு சேவைகளின் மொத்தப் பயனீட்டாளர்களின் எண்ணிக்கை 600 மில்லியன். ஃபேஸ் புக் பயனீட்டாளர்களின் எண்ணிக்கை 350 மில்லியன். அந்த வருட இறுதியில் யாஹூ தனது தளத்தில் ஃபேஸ்புக் தொடர்பு (Facebook Connect) என்ற சேவையை நிறுவப் போவதாக அறிவித்தது. தனது உள்கட்டமைப்புக்குள் இயங்கும். . .