அதிகாலையிலேயே முருகேசனுக்கு விழிப்பு வந்துவிட்டது. அதிகாலை என்றுதான் நினைத்தான். ஆனால், ஜன்னல் வழியே வந்த வெளிச்சம் சூரிய ஒளி அல்ல; தெருவிளக்கின் பிரதிபலிப்பு என்று தெரிந்தவுடன் செல்போனை எடுத்து மணி பார்த்தான். இரண்டரை. எழுந்தான். எழுந்திருக்க முடியவில்லை. கால்களில் யாரோ சங்கிலியால் கட்டியது போன்ற வலி. எழுந்து அமர்ந்து பாதங்களைத் தடவிப் பார்த்தான். பயங்கரமாக வீங்கியிருந்தன. வயிற்றிலும் ஏதோ பிரச்னை என்று உள்ளுணர்வு சொல்ல, தடவிப் பார்த்தால் அது பானைபோல் உப்பியிருந்தது. இரண்டு கைகளும் வீங்கி இருந்தன. முதுகில் ஒரே அரிப்பு. சொறிந்துவிட்டுக் கையைப் பார்த்தால், அதில் பிசுபிசுப்பாக வழிந்த ரத்தம். சம் திங் ராங். கஷ்டப்பட்டு எழுந்து விளக்கைப் போட்டான். அவன் கால்களையும் கைகளையும் வயிற்றையும் பார்க்க அவனுக்கே பிடிக்கவில்லை. விடிந்ததும் எங்காவது பெரிய ஆஸ்பத்திரிக்குப். . .