# கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் மேலும் ஒரு புக்கி கைது; ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல் # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங் # சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை # 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல் # ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது # 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் # ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு # 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது' # வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின் # ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு? # எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத் # கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை #


Comment count5
save
print A+     A-
இது சமணர் சரித்திரம் !

ஞா.அண்ணாமலை ராஜா

''கரூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஆறுநாட்டார் மலை சமணர் குகை யைப் பற்றி என் விகடனில் எழுதுங்களேன்!'' - வாசகர் ஒருவர் வாய்ஸ் ஸ்நாப் மூலம் கோரிக்கைவைத்தார்... அதைத் தட்ட முடியுமா?          

 

கரூரில் இருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது வேலாயுதம்பாளையம். அங்குதான் ஆறுநாட்டார் மலை அமைந்து உள்ளது. இங்கு உள்ள பாலசுப்பிரமணியர்திருக் கோயில், ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள். இங்குதான் சமணர்கள் தியானம் செய்த குகைகள் அமைந்து உள்ளன.

பாலசுப்பிரமணியர் கோயிலின் அர்ச்சகர் சுவாமிநாதன், ''கி.பி. இரண்டாம் நூற்றாண்டு... சேர மன்னர்கள் சைவ சமயத்தைவிட்டு சமண சமயத்துக்கு மாறி, கொல்லாமை போன்ற கொள்கைகளைக் கடைபிடித்திருந்த காலம். அப்போது வட மாநிலங்களில் இருந்த சமணத் துறவிகளை, தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்தான் சேர மன்னன். அவர்களில் பெரும்பாலானோரை தற்போது முருகன் கோயில் அமைந்து உள்ள இடத்தின் பின்புறம் 100 அடி தொலைவில் உள்ள மலைக் குன்றுகளில் தங்கவைத்தான். அவர்கள் தூங்க அங்கு கல் படுக்கைகள், மலையைக் குடைந்து நீர்த் தேக்கத் தொட்டிகள் போன்றவற்றை உருவாக்கிக் கொடுத்து அவர் களுக்கு உணவிட்டு வந்தான்.

பின்பு அப்பர், சேர மன்னர்களுக்கு சைவ சமயத்தைப் போதித்தார். அதற்காக அவர் கல்லில் கட்டி கடலிலும் சுண்ணம்புக் கால்       வாயிலும் போடப்பட்டார்.  இந்தக் கொடுமை  களில் இருந்து மீண்டுவந்து, விடாமல் சைவ சமயத்தைப் போதித்து, சேரர்களை சைவத் துக்கு மீளச் செய்தார். இடைப்பட்ட இந்த 200 ஆண்டுகளும் இந்த மலைதான் சமணத் துறவிகளுக்குப் புகலிடமாக இருந்தது.

அதன்பிறகு கடையேழு வள்ளல்களில் ஒருவராகிய வல்வில் ஓரி இந்த மலையுடன் சேர்த்து அருகில் இருந்த ஐந்து மலைகளையும் ஆண்டுவந்தான். மொத்தம் ஆறு நாட்டை ஆண்ட அவனுடைய தலைநகர் இந்த மலை என்பதால், இந்த மலைக்கு ஆறுநாட்டார் மலை என்று பெயர் வந்தது.

மன அமைதி தேடி வருபவர்களுக்கு இம்மலை சிறந்த இடம். இங்கு வந்து தியானம் செய்தால் பல பிரச்னைகள் தீரும் என்பது கரூர் மக்களின் நம்பிக்கை. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மாலை நேரங்களில் இங்கு தியானம் செய்ய வரு பவர்களின் எண்ணிக்கை ஏராளம். வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளைச் சேர்ந்த வர்களும் இதில் அடக்கம். செம்மொழி மாநாட்டுக்காக எடுத்த 'செம்மொழியான தமிழ் மொழி யாம்...’ பாடலில் டி.எம்.எஸ். பாடி முடித்ததும் வரும் பழமையான கல்வெட்டு இங்கு உள்ளதுதான். அந்தக் கால பண்பாடு, மக்களின் வாழ்க்கை முறை என ஏராளமான விஷயங்களை இம்மலை முழுவதும் உள்ள கற்களில் பழங்கால மன்னர்கள், எழுத்துக்களாகப் பொறித்து வைத்து உள்ளனர்'' என்று விரிவாக  விளக்கினார்.

என்ன... சமணர் குகையைப் பார்க்க தயார் ஆகிட்டீங்களா?


[ Top ]
nalliah1 Years ago
இஸ்லாம் தமிழகதில் வேரூன்றாமல் இருக்க மராட்டிய (சிவாஜி) சாம்ராஜியத்திர்க்கும், விஜயநகர சாம்ராஜ்ஜியதிற்க்கும் எல்லோரும் கடமை பட்டுள்ளோம். ஒளரங்கசீபின் படைகளை இவர்கள் இருவர்களும் எதிர்கொண்டதால் நம் கோவில்கள் எல்லாம் தப்பின.
Kalpana1 Years ago
மற்றுமொரு வரலாற்று திரிப்பு. பௌத்த, சமண சமயங்களை தென்னிந்தியாவிலிருந்து முற்றிலும் அழித்தொழித்த பெருமை ஹிந்து மதத்தையே சாரும். தேவாரத்தின் அநேக சமண எதிர்ப்பு வாசகங்கள் உண்டு என்பதை எத்தனை பேர் அறிவர்? தமிழனுடைய வரலாற்றையே அறியாதவன் தானே தமிழன். வெட்கம். இதுபோலவே மற்றுமொரு உதாரணம் காட்பாடியருகே அமைந்த மேல்பாடி. இது வள்ளிமலை எனவும் அழைக்கப்படும் ஒரு ஊர். இங்கும் சமணர்களின் வழிபாட்டு ஸ்தலங்கள் அழிக்கப்பட்டு அவை முருக ஆலயங்களாக மாற்றப்பட்டுவிட்டன.
Crap1 Years ago
1893ல் சிகாகோ உரையில் முதற்பகுதியில் இந்துமதத்தையும், சுனாமியையும் எடுத்துக்காட்டு உவமையாக இணைத்து விவேகானந்தர் பேசியிருப்பார். அதை ஒரு முறை படித்தால், எந்த மதங்கள் இந்தியாவிற்குள் எதற்கு வந்தன, எதை அழித்தன பின் எப்படி அழிந்தன என்பது விளங்கும்.
Appan1 Years ago
தமிழகத்தில் கிபி 2 - 6 ஆம் நூற்றாண்டுகளில் களப்பிரார் ஆட்சி செய்தார்கள். இவர்களின் மதம் சமணம். இந்த காலகட்டத்தில் சமணம் பரவியது. களப்பிரார் ஆட்சி இரும்புகை கொண்ட ஆட்சியாக' ' ஆக இருந்தது. இந்த காலகட்டத்தை தமிழகம் இருண்ட காலம் என்று சொல்வார்கள். சிவமதம்- சைவம் விஜநகர பேரரசு காலத்தில் கோலோய்ச்சியது. இஸ்லாம் தென் இந்தியாவில் வேரூண்றாமல் இருக்க சைவம் தான் காரணம். சிவம் எதிரிகளை அழிக்கும்.
Displaying 1 - 4 of 4
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
18-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
11-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices