# எஸ்.பி. சண்முகநாதன், அப்துல் ரகீம் தமிழக அமைச்சர்களாக பதவியேற்பு # ராஜ்யசபா தேர்தலில் விட்டுக்கொடுத்த கே. தங்கமுத்து குடிசை மாற்று வாரிய தலைவராக நியமனம் # இந்துத்துவத்தால் மட்டுமே நாட்டை மாற்றி அமைக்க முடியும்: ஆர்.எஸ்.எஸ். # உத்தரகாண்ட்: மீட்பு பணியில் ஈடுபட்ட 5 வீரர்கள் பலி # சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட்: தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேர் மேல்முறையீடு # பீகார் பந்த்: பா.ஜனதா - ஐக்கிய ஜனதா தள தொண்டர்கள் மோதல்; பலர் காயம் # மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் ஆதரவை கேட்கிறது தேமுதிக # ராஜ்ய சபா தேர்தல்; ஒரு ஓட்டுக்கு ஒரு கோடி - தடதடக்கும் எஸ்.எம்.எஸ். பிரசாரம் # அத்வானியுடன் மோடி திடீர் சந்திப்பு # முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக கோரி பீகாரில் முழு அடைப்பு #


Comment count2
save
print A+     A-
தேனியிலதான் வாழ்க்கை இருக்கு!

'மைனா’வுக்குப் பிறகு 'கும்கி’ படத்துக்காக மீண்டும் தேனி வந்திருக்கிறார் இயக்குநர் பிரபு சாலமன்.

 ''சென்னையில் 10 சதவிகிதம்தான் நிறைவான வாழ்க்கை இருக்கு. மக்களுக்கான வாழ்க்கை கிராமப் பகுதிகளில்தான் இருக்கு. நிஜத்திலே நிறைய சினிமாவுக்கான கதைகள் தென் மாவட்ட  கிராமப்புறங்களில்தான் இருக்குது. அதான் சென்னை தாண்டி இங்கே வர்றோம். அதுவும் தேனியைச் சுற்றியுள்ள மலைகள், அடுக்கடுக்கான வயல் வெளிகள், பசுமை, ஈரம், மண் சார்ந்த மனிதர்கள் எல்லாமே பார்க்கவும், சொல்லவும் அவ்வளவு அழகான விஷயங்கள்!''

'' 'கும்கி’ யானைகளைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்க?''

''2012-ம் வருஷம் யானைகளோட வருஷம். யானை ஓர் அற்புதமான விலங்கு. அது யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாது. யானைகளின் வாழ்வியல் ஆதாரங்களை மனிதர்கள் ஆக்கிரமிப்புச் செய்யும்போதுதான் யானைகள் உணவுக்காக, நீருக்காக ஊருக்குள் வருது. 'யானை ஊருக்குள், தோட்டத்துக்குள் புகுந்து அட்டகாசம்’னு வர்ற செய்தி, உண்மையிலேயே மனுசங்களுக்கு ஆதரவா எழுதப்படுற பொய். ஆனா, நிஜத்தில் யானைகளின் நியாயத்தை, உண்மையை யாரும் புரிஞ்சிக்கறதே இல்லை. கும்கிக்காக, 50-60 யானைகளைப் பார்த்து கடைசியில் 'மாணிக்கத்தை’த் தேர்ந்தெடுத்தோம். அழகான யானை அது. வெல்லம் கொடுத்து பழக்கி, கொஞ்சம் கொஞ்சமாக மாணிக்கம்கிட்ட ஃப்ரெண்ட் ஆனோம். ஷூட்டிங் முடிஞ்சு மாணிக்கம் கிளம்பும்போது அழுகையே வந்துடுச்சு!''

''பிரபு பையன் எப்படி நடிச்சிருக்கார்?''

''விக்ரம் பிரபு ரொம்ப நல்லா பண்ணி இருக்கார். அவர்கிட்டயே  பேசுங்க!'' என்று விக்ரம் பிரபுவை என்னிடம் அறிமுகப்படுத்திவைக்கிறார் பிரபு சாலமன்.

''தாத்தா, அப்பா எல்லாரும் பெரிய நடிகர்களாக இருந்தாலும்,  வேலைனு வந்துட்டா, எல்லாருக்கும் கஷ்டம் ஒண்ணுதான். சென்னை வாழ்க்கையெல்லாம் ஒரு வாழ்க்கையே இல்லைனு புரிஞ்சுக்கிட்டேன். அதை எனக்கு உணர்த்தினது இந்த யானைப் பாகன் கேரக்டர்தான். இந்தப் படம் எல்லா அப்பாவி யானைகளுக்குமான சமர்ப்பணம்!'' என்கிறார் விக்ரம் பிரபு.

-சண்.சரவணக்குமார்
படங்கள்: வீ.சக்தி அருணகிரி


[ Top ]
fakroodeen1 Years ago
தண்ணி 15 நாளைக்கு ஒரு தடவை தான் கிடைக்கும் பரவாயில்லையா உங்க ஊர்ல
Baskaran1 Years ago
தேனி அருமையான ஊர்...It my Native place and i am just waiting to go back to settle down there from Singapore.
Displaying 1 - 2 of 2
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
18-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
11-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices