# தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் 34 பேர் மாற்றம் # நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 % பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஜெ. கடிதம் # தோல்வியால் ஆத்திரம்: நடுவரை அடித்த ராஜபக்சே மகன் # திருமாவளவனுக்கு தடை: விழுப்புரம் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு # நோ பால் விவகாரம்: ஸ்ரீசாந்தை மிரட்டிய தரகர்கள் # ராமதாஸ், காடுவெட்டி குரு மீது தமிழக அரசு அவதூறு வழக்கு # மாசு வெளியேற்ற விவகாரத்தில் இரட்டை நிலை: தமிழக அரசு மீது ஸ்டெர்லைட் புகார் # பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு # சேப்பாக்கம் மைதானம்: 3 கேலரிகளுக்கு மீண்டும் சீல் # கிரிக்கெட் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனிடம் மும்பை போலீஸ் விசாரணை # இலங்கைக்கு உதவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: பசில் ராஜபக்சே # தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு #


Comment count2
save
print A+     A-
சாவைச் சந்தித்துத் திரும்பும் மரணக் கிணறு சாகசம்!

'கரணம் தப்பினால் மரணம்... அந்த மரணத்துக்கே சவால்விடும் ஒரு  சாகசத்தைப் பார்க்க அனைவரும் வாருங்கள்!’  -திண்டுக்கல்லில் ஒலிப்பெருக்கியில் ஹை-டெசிபலில் அறிவித்துக்கொண்டு இருக்கிறார் அந்தப் பெரியவர். தலைக்கு 30 டிக்கெட் வாங்கி, மரணக் கிணற்றின் மேல் மக்கள் கூடுகிறார்கள். இரண்டு பைக்குகளை உயிர்ப்பித்து ஆக்ஸிலேட்டரை முறுக்குகிறார்கள் இரண்டு ரைடர்கள். 60 கி.மீ. வேகத்தில் அதிவேகமாகச் சுற்ற ஆரம்பிக்கிறார்கள்.  ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டும்போதே எழுந்து நிற்பது, கால் மேல் கால் போட்டு உட்கார்வது,  மல்லாக்கப் படுப்பது, கை கோத்துக்கொள்வது என்று மெய் சிலிர்க்கவைக்கிறார்கள்.  

 சிறிது நேரத்தில் ஒரு மாருதி காரும் சேர்ந்து  சுற்ற ஆரம்பிக்கிறது. மாருதி பேனட்டில் படுப்பது, மாருதிக்கு முன் குறுக்கும் மறுக்குமாக பைக் ஓட்டுவது என சாகசம் உச்சநிலையை எட்டும்போது, மக்களில் பலர் பயத்தில் கண்களை மூடிக்கொள்கிறார்கள். பதினைந்து நிமிடங்களில் முடிவுக்குவருகிறது நிகழ்ச்சி. சாகசக் கதை சொல்லத் தொடங்குகிறார் சலீம் கான். மரணக் கிணற்றில் பைக் ஓட்டும் இவர், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர். ''ஏழு வருஷமா மரணக் கிணறுல பைக் ஓட்டிட்டு இருக்கேன். 10-வது வரைக்கும் படிச்சேன். வீட்டுல நல்ல வசதிதான். இந்தத் தொழில் செஞ்சுதான் சாப்பிடணும்னு அவசியம் இல்லை. த்ரில்லுக்காக இந்த வேலை பார்க்கிறேன். ஒவ்வொரு தடவை வீட்டுக்குப் போகும்போதும் என் அப்பா, அம்மா என்னை கட்டிப்பிடிச்சு அழுவாங்க. எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டாங்க. நான் கேட்கலை. கூண்டுல பைக் ஓட்டும்போது மனசுல எதுவுமே இருக்காது. கவனமெல்லாம் பைக் மேல மட்டும்தான் இருக்கும். இதுவும் ஒருவகையான யோகாதான். சில சமயம் என்னையும் மீறி விபத்து நடந்துடும். ஒரு தடவை  டயர் பஞ்சராகி கீழே விழுந்து ஒரு மாசம் ஹாஸ்பிட்டல்ல இருந்தேன். நான் பைக் ஓட்டுறதைப் பார்த்து, ஒரு பெரியவர் என்னை கட்டிப்பிடிச்சு அழுதார். நிறைய பொண்ணுங்க என்னைக் காதலிக்கிறதாச் சொல்வாங்க. யார் என்ன சொன்னாலும் சிரிச்சிக்கிட்டு கிளம்பிடுவேன். எனக்குக் குடிக்கிற பழக்கம் இருக்கு. ஆனா பைக் ஓட்டும்போது, குடிக்க மாட்டேன். இது மரண கிணறுக்கு மட்டும் இல்லை... ரோட்டுக்கும் பொருந்தும். ஏன்னா உயிர் முக்கியம் பாஸ்!'' சிரிக்கிறார் சலீம் கான்.

கூண்டில் மாருதி கார் ஓட்டும் சுனில் ஜேக்கப், ''இந்தியாவுல மட்டும் இல்லாம, நிறைய வெளிநாடுகளில் ஷோ நடத்தி இருக்கேன். என் அனுபவத்துல நிறைய விபத்துகள், சில இறப்புகளைப் பார்த்திருக்கேன். இது எங்களுக்குப் பழகிடுச்சு. பைக் ஆக்ஸிலேட்டர்ல சணல் கயிறு ஒண்ணைச் சுற்றி வெச்சிருப்போம். ஆக்ஸிலேட்டரைத் தேவையான அளவு திருகிவிட்டுட்டுக் கையை எடுத்துட்டா, ஆக்ஸிலேட்டர் மாறாமல் அப்படியே இருக்கும். அதே மாதிரி கூண்டுல தண்டவாளம் மாதிரி ஒரு அடி அகலத் துக்கு வரிசையா ஆணிகளை அடிச்சிவெச்சிருப்போம். அதுதான் எங்களுக்கு ட்ராக். வண்டி ஓட்டுறவங்க அதைக் கணக்குவெச்சு ஓட்டணும். இந்த மாதிரி நிறைய ட்ரிக் இருக்கு. இதெல்லாம் இங்கே மட்டும்தான். ரோட்டுல போகும்போது நல்ல பசங்களா பைக் ஓட்டுவோம்!'' ரசித்து சிரிக்கிறார் ஜேக்கப்.

- உ.அருண்குமார்
படங்கள்: வீ.சிவக்குமார்


[ Top ]
Suresh1 Years ago
என்னது, சில இறப்புகளை பார்த்திருக்கிங்களா? எப்ப சாமிகளா ஆள விடுங்கப்பா.. ஏதோ அட்வெஞ்சர் அவ்வப்போது பார்க்க்லாம் நு நினைப்பேன், இனி இந்த மாதிரி வலியப்ப்போய் ஆபத்தை தேடிக்கிற விளையாட்டுகளை பார்ப்பதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன்.
balasubramani1 Years ago
God be with them. Congrats.
Displaying 1 - 2 of 2
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
18-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
11-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices