கோடைக் காலத்தில் அதிகம் பயன்படும் மூலிகை நன்னாரி. அங்காரிமூலி, நறுக்குமூலம், நறுநீண்டி, நறுநெட்டி, பாதாளமூலி, பாற்கொடி, கிருஷ்ணவல்லி, சாரியம் என நன்னாரிக்குப் பல பெயர்கள். சிறு கசப்பும் இனிப்பும் சேர்ந்த சுவையைக்கொண்ட நன்னாரி வேருக்கு மிகுந்த குளிர்ச்சித்தன்மை உண்டு. நீர்க் கடுப்பு குணமாக... ஒரு கைப்பிடி அளவு பசுமையான நன்னாரி வேரினை நீரில் அலசி சுத்தம் செய்யவும். அதனைத் தேவைக்கு ஏற்ப குடிநீரில் இட்டு நன்கு கொதிக்கவைத்து கஷாயமாகக் காய்ச்சிக்கொள்ளவும். அரை டம்ளர் அளவு கஷாயத்தில் சர்க்கரை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்துவந்தால், சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் குணமாகும். மூலச்சூடு, வெட்டைச்சூடு குணமாக... தண்ணீரில் சுத்தம்செய்த பசுமையான நன்னாரி வேரை சிறிது அளவு எடுத்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். பின்னர் இதனை ஒரு டம்ளர் காய்ச்சிய. . .