அடுத்தடுத்து ஆறு முறை நில நடுக்கம்!
'விட்டாச்சு லீவு...’ என்று, விபரீதம் புரியாமல் கடந்த 11-ம் தேதி மதியமே துள்ளிக் குதித்துக் கிளம்பினார்கள். யார்...? சென்னை பள்ளிக் குழந்தைகள்தான். நில நடுக்கம் உணரப்பட்டதுமே சென்னை முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. நில நடுக்கம் என்றால் என்னவென்றே அறியாத குழந்தைகள், சந்தோஷமாக ஓடினார்கள். வீதி யெங்கும் பெரியவர்கள் பயந்த விழிகளுடன் வீட்டுக்கு வெளியே நிற்பதைக் கண்டபிறகுதான் குழந்தைகளுக்கும் பயம் வந்தது. முன்பெல்லாம் நிலநடுக்கம் எப்போதாவது வரும் என்றாலும், பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார்கள். ஆனால், 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பாதிப்புக்குப் பிறகு தலைகீழாகி விட்டது நிலைமை. நிலநடுக்கத்தை உணர்ந்ததும், அலறி அடித்துக்கொண்டு அலுவலகத்தையும் வீட்டையும் விட்டு ரோட்டுக்கு மக்கள் ஓடி வந்து விட்டார்கள். வாரத்துக்கு இரண்டு முறையாவது நிலநடுக் கத்தைச் சந்திக்கும் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில். . .