ராமஜெயத்தின் ரத்த நிமிடங்கள்?
'ராமஜெயத்தைக் கொலை செஞ்சவங்களைப்பத்தி தெரிஞ்சுக்க திருச்சி போலீஸ் மோகனூர் போயிருக்காங்க...’ - போலீஸ் வட்டாரத்தில் நமக்கு கிடைத்த ஒரு வரித்தகவல் இது. மோகனூர் எங்கே என்று விசாரித்ததுமே, 'என்ன ஆவியோட பேசப்போறீங்களா?’ என்றுதான் பலரும் கேட்டார்கள். 'அடப் பாவமே, போலீஸ் கடைசியில் இந்த வழிக்குப் போய் விட்டதா?’ நாமக்கல்லில் இருந்து காட்டுப்புத்தூர் செல்லும் 16-வது கிலோ மீட்டரில் இருக்கிறது மோகனூர். 'ஆவியோடு பேசுபவர்கள் யாராவது இருக்கிறார்களா?’ என்று கேட்டதுமே, ''ஆமாங்க, 'ஆவி ராணி’ன்னு ஒருத்தவங்க இருக்காங்க. மாரியம்மன் கோயிலுக்கு எதிர்லதான் அவங்க வீடு..'' என்று வழி சொல்லி அனுப்பி வைத்தார் பூ விற்கும் ஒரு பெண். ஆவி ராணியின் வீட்டுக் கதவைத் தட்டினோம். உள்ளே இருந்து எட்டிப்பார்த்த ஒரு பெண், ''ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகள்ல மட்டும்தான் ஆவியோட. . .