பல்லவ மன்னன், நெல்லை. அம்பேத்கரை ஒரு தலித் தலைவராகத்தான் எல்லோரும் பார்க்கிறார்கள். அவரை தேசியத் தலைவராகப் பார்ப்பது இல்லையே ஏன்? அம்பேத்கர், தேசியத் தலைவரே. அவரைச் சிலர் சாதிக் கண்ணோட்டத்துடன் பார்க்க, சாதிதான் காரணமாக அமைந்துவிட்டது. இந்தியாவின் எல்லாச் சாதியினரும் எந்தச் சட்டதிட்டத்துக்கு உட்பட்டு நடக்கிறார்களோ, அதை எழுதியவர் அவர்தானே? தேசியத் தலைவராக அவரை மதிக்க, சிலர் மறுக்கலாம். ஆனால் அம்பேத்கர் எழுதிய சட்டத்தை நிராகரிக்க முடியுமா? நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாவது அவரது சொல்படிதானே எல்லோரும் நடக்கிறார்கள்! கே.ஏ.என். சிவம், பெங்களூரு. அவை நாகரிகம் என்பதை விளக்க முடியுமா? பெரியார் ஒரு கூட்டத்தில் கலந்துகொள்வதாக இருந்தது. கடவுள் நம்பிக்கைகொண்டவர்கள்தான் அந்தக் கூட்டத்தை நடத்தியவர்கள். பெரியார் வருவதற்கு முன்னதாக கடவுள் வாழ்த்துப் பாடலை ஒலிக்கவைத்துவிடலாம் என்று அவர்கள் திட்டமிட்டு. . .