அமர்த்தியா சென் - சமூக நீதிப் போராளி
ரிச்சா சக்சேனா (தமிழில்: சி.எஸ்.தேவநாதன்) எதிர் வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி 2, விலை 100/- 'எனது குழந்தைகள் மிகவும் பசியாக இருந்தனர்’ - இந்த வார்த்தைதான் அமர்த்தியா சென் என்ற இளைஞனைப் பொருளாதார நிபுணராக மாற்றி நோபல் பரிசும் பெற வைத்தது... என்ற நிகழ்வுடன் இந்தப் புத்தகம் தொடங்குகிறது. மிகச் சிறுவனாக இருந்தபோது நடந்த ஒரு மதக் கலவரத்தில் முஸ்லிம் மனிதர் ஒருவர் சிக்கிக்கொள்கிறார். அதில் தாக்கப்படுகிறார். ரத்தம் வடிந்த நிலையில் அமர்த்தியாவின் வீட்டுக்கு வந்த அவரை, இவரது அப்பாதான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். வழியில் அந்த மனிதர் இறக்கிறார். இறக்கும் நேரத்தில் அந்த மனிதர் உச்சரித்த வார்த்தைகள்... 'எனது குழந்தைகள் மிகவும் பசியாக இருந்தனர்!’ ஏன் பசியாக இருந்தார்கள்? காதர் மியான். . .