அணு உலைக்கான பணிகள் ஜெட் வேகத்தில் நடக்கும்போதிலும், 'அணு உலையை இழுத்து மூடும்வரை ஓய மாட்டோம்’ என்ற ஒற்றைக் கோரிக்கையுடன் சுற்றுப்புறக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இன்னமும் போராடி வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாகக் களம் இறங்கி இருக்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான தோழர் நல்லகண்ணு. இதற்காக கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் சி.மகேந்திரன், சட்ட மன்றக் கொறடா உலகநாதன், முன்னாள் எம்.பி-யான அப்பாத்துரை, முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் எஸ்.வி.கிருஷ்ணன், பழனிச்சாமி, நெல்லை மாவட்டக் கம்யூனிஸ்ட் செயலாளர் சண்முகவேல், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ் போன்ற முக்கிய நிர்வாகிகளுடன் கடந்த 9-ம் தேதி, இடிந்தகரை கிராமத்துக்கு வந்தார் நல்லகண்ணு. உண்ணாவிரதப் பந்தலில் இருந்த போராட்டக் குழுவினரை சந்தித்தவர், போராட்டத்தின் வீரியத்தைக் கண்டு. . .