அமிர்தசரஸில் 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி மிகுந்த கொண்டாட்டமாகவே தொடங்கியது, அன்று... பைசாகித் திருவிழா. அதாவது, புத்தாண்டுக் கொண்டாட்டம். வீடுகளை அலங்காரம் செய்து, உறவினர் மற்றும் நண்பர்களுக்கு இனிப்பு வழங்கி மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தனர் மக்கள். நறுமணத்தின் ஊடாக துர்நாற்றம் பரவுவது போல இருந்தது ஜெனரல் டயரின் உத்தரவு. ரௌலட் சட்டத்தைத் தொடர்ந்து உருவான இந்திய மக்களின் எதிர்ப்பை ஒடுக்க வேண்டும் என்று, படை வீரர்களுக்கு ஜெனரல் டயர் உத்தரவு இட்டிருந்தார். இதையடுத்து, அமிர்தசரஸ் நகரின் முக்கிய வீதிகளில் படை வீரர்களின் அணிவகுப்பு நடந்தது. மக்களை அச்சுறுத்திப் பணியவைக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே, அந்த அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. முரசுகள் முழங்கியபடியே அணிவகுப்பு சென்றது. அமிர்தசரஸின் இன்ஸ்பெக்டர் அஷ்ரப்கான், சப் இன்ஸ்பெக்டர். . .