வார்த்தை தவறிவிட்டார் என்.வி.!
அம்பேத்கர் விருதை இந்த ஆண்டு தோழர் என்.வி-க்கு அறிவித்து இருந்தார் தொல். திருமாவளவன். வரும் 16-ம் தேதி இந்த விருது கொடுக்கப்படுவதாக இருந்தது. இதற்காக ஒரு பாராட்டு விழா நடத்த மார்க்சிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நகர் கமிட்டி சார்பில் ஏற்பாடுகளும் பரபரப்பாக நடந்தன. ஆனால், விருது பெறாமலேயே கடந்த 10-ம் தேதி சென்னையில் மரணம் அடைந்துவிட்டார், என்.வி. என்று தோழர்களால் அன்போடு அழைக்கப்படும் என்.வரதராஜன். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே கம்பிளியப்பட்டியில் 1925-ம் ஆண்டு பிறந்தவர் என்.வரதராஜன். எட்டாம் வகுப்பு வரை படித்தவர், பஞ்சாலை தொழிலாளர்களின் உரிமைக்காக சங்கம் அமைத்துப் போராடினார். 1943-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஆனார். 1964-ம் ஆண்டு ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சில் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து, தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய முக்கிய சிலரில் என்.வி-யும் ஒருவர். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும், மூன்று முறை கட்சியின் மாநிலச் செயலாளராகவும் பணியாற்றி. . .