ஜெர்மனியை ஜெயித்த துரைசாமி! ஈரோடு மாவட்டம், மரவாபாளையத்தைச் சேர்ந்தவர் 62 வயது துரைசாமி. ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி. சர்க்கரை நோய்க்காகச் சிகிச்சைக்குப் போனவரைப் பரிசோதித்த மருத்துவர் சாமி, இவரது பித்தைப்பையில் கற்கள் இருப்பதைக் கண்டறிந்தார். 'லேப்ராஸ்கோப்பி’ முறையில் அறுவை சிகிச்சை செய்து, 4,294 கற்களை அகற்றி உள்ளனர். இந்த அறுவை சிகிச்சை சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்து உள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு மூதாட்டியின் பித்தப்பையில் இருந்து 3,110 கற்கள் அகற்றப்பட்டதுதான் உலக சாதனை. அதை முறியடித்து இருக்கிறார் துரைசாமி. வேதனையிலும் ஒரு சாதனை! ஆரோக்கியம் தரும் சூரிய நமஸ்காரம்! 'ஆரோக்கியம் இயற்கையிலேயே இருக்கிறது. நாம்தான் அதை உணராமல் இருக்கிறோம்’ என்பதை உணர்த்திய நிகழ்ச்சி இது. ஸ்ரீஸ்ரீரவிஷங்கரின் வாழும் கலை அமைப்பினர் சூரிய நமஸ்கார நிகழ்ச்சியை. . .