# யமுனை நதியில் அபாய அளவை தாண்டி வெள்ளம்: டெல்லியில் எச்சரிக்கை # வெள்ள பகுதிகளை பார்வையிட மன்மோகன் சிங், சோனியா உத்தரகாண்ட் பயணம் # இந்தாண்டு 35 லட்சம் மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர் வழங்க திட்டம் # நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் அரசு வெற்றி # மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் ஆதரவை கோரி சோனியாவை சந்தித்தார் டி.ஆர். பாலு # கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு # மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கோரி அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு # சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் மாநிலங்களவை தேர்தலில் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம் # பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று சட்டப்பேரவையில் தமது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார் # புதுக்கோட்டை அருகே மினி வேன் மீது தனியார் பேருந்து மோதிய விபத்து: 7 குழந்தைகள் பலி # பொறியியல் கலந்தாய்வு: விளையாட்டுப் பிரிவுக்கான முடிவை வெளியிட தடை # செங்கல்பட்டிலிருந்து 5 இலங்கை தமிழர்கள் திருச்சி முகாமிற்கு அதிரடி மாற்றம் #


Comment count1
save
print A+     A-
தொடரும் மருத்துவ முகாம்...

100 நாட்கள் கடந்துவிட்டன. ஆனாலும், 'தானே’ ஆடிய தாண்டவத்தின் சுவடுகள் இன்னமும் துடைக்கப்படவில்லை. மரங்களின் சிறு துளிர்ப்புபோல் மனரீதியாக மனிதர்கள் எழ நினைத்தாலும், நோய்கள் அவர்களை முடக்கிப்போடுகின்றன மறுபடியும். அவர்களைக் கை தூக்கிவிடும் கடமை உணர்வோடு 'தானே’ பாதிப்பு நிகழ்ந்த மண்ணில் தொடர்ந்து மருத்துவ முகாம்களை நடத்திவருகிறது 'டாக்டர் விகடன்’. பத்திரக்கோட்டையில் தொடங்கிய இந்தப் பயணம், அரசடிக்குப்பம் புதூர், செம்மங்குப்பம் ஆகிய கிராமங்களைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 1-ம் தேதி பாலூர் அருகே உள்ள சன்னியாசிப்பேட்டையில் நடைபெற்றது.

 சாதாரணத் தலைவலி, காய்ச்சல் என்றால்கூட, சிகிச்சைக்காக 12 கி.மீ. தொலைவில் உள்ள பண்ருட்டி அல்லது கடலூருக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் இந்தக் கிராம மக்களுக்கு. 'தானே’ தழும்பு மாறாத இந்த மண்ணில் எம்.ஆர்.கே. மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் நம் முகாம் தொடங்கியது.

சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையைச் சேர்ந்த மூத்த மருத்துவர்கள் குழு அந்தப் பள்ளியில் ஆஜரானது. பெண்கள் மற்றும் மகப்பேறு மருத்துவம், இதயம், மூளை - முதுகுத்தண்டு, எலும்பு, பொது மருத்துவம் ஆகிய சிறப்புப் பிரிவுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் சன்னியாசிப்பேட்டை கிராம மக்களிடம் பரிவோடு பேசி, அவர்களின் உடல் - மனப் பிரச்னைகளைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தார்கள்.

சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள பிரபா மெடிக்கல்ஸ் உரிமையாளர்கள் ஆர்.நெடுஞ்செழியன், என்.பிரபாகரன் ஆகியோர் அளித்திருந்த மருந்து - மாத்திரைகளை மருத்துவர்கள் சிகிச்சைக்கு வந்திருந்த சன்னியாசிப்பேட்டை மக்களுக்கு இலவசமாக வழங்கி னார்கள்.

மருத்துவ முகாமில் பங்கேற்றவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையைக் கண்டறியும் சோதனை, ஈசிஜி மற்றும் எக்கோ பரிசோதனைகளும்கூட இலவசமாக செய்யப்பட்டன. எட்டு பேருக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பது கண்டறியப்பட்டு,  மேல் சிகிச்சைக்காகப் பரிந்துரைக்கப்பட்டார்கள்.

முகாமுக்கு வந்திருந்த கன்னியம்மா என்ற மூதாட்டி, ''இவ்ளோ பேர் எங்க கிராமத்துக்கு வருவீங்கன்னு நாங்க நினைக்கவே இல்ல. மரங்களை இழந்துட்டாலும், உங்களை மாதிரி மனுஷங்களைச் சம்பாரிச்சு இருக்கோமே... சொந்தப் பொறப்பு மாதிரி எங்களுக்காக இவ்வளவு தூரம் வந்து, எங்க பிரச்னைகளை விசாரிக்கிறீங்களே... இதுக்கே நாங்க ரொம்ப கடமைப்பட்டிருக்கோம்பா'' என்றார் நெகிழ்ச்சியுடன்.

குழந்தைகள், பெரியவர்கள் என முகாமில்  450-க்கும் மேற்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. எம்.ஆர்.கே. நர்சரி தொடக்கப் பள்ளியின் தாளாளர் மாயவன் மற்றும் பள்ளி ஆசிரியர்களும் முகாம் பணிகளில் நம்முடன் இணைந்து பணியாற்றினார்கள்.

அடுத்து நாம் முகாம் நடத்தப்போவது பண்ருட்டி அருகே உள்ள தாழம்பட்டு கிராமத்தில். ஆறாத புண்ணாக மாறிக்கிடக்கும் அந்தப் புஞ்சை மண்ணின் சோகத்தை நம்மால் முடிந்த மட்டும் தீர்ப்போமே..!


[ Top ]
chitra1 Years ago
Thanks for Vikatan :)
Displaying 1 - 1 of 1
உங்கள் கருத்து
Name:    Email Id:   
தமிழ்   English   (For type in tamil : அம்மா = ammaa, விகடன் = vikatan)
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவு நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும்)
விகடன் இணையதள கருத்துப் பகுதியின் விதிகளும் - வேண்டுகோளும்
அட்டை படம்
01-மே -2012
சென்ற இதழ்
16-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices