குறைந்தது வட்டி விகிதம்: பெருகுமா வளர்ச்சி?
தொடர்ச்சியாக உயர்ந்து வந்த பணவீக்கத்தின் காரணமாக மார்ச் 2010 முதல் அக்டோபர் 2011 வரை ரிசர்வ் வங்கி 13 முறை வட்டி விகிதத்தை உயர்த்தியது. தற்போது பணவீக்கம் ஓரளவுக்கு குறைந்ததன் காரணமாக வட்டி விகிதத்தை 0.50 சதவிகிதம் அளவுக்கு குறைத்திருக்கிறது ஆர்.பி.ஐ. எல்லோரும் 0.25 சதவிகிதம் அளவுக்கே வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று எதிர்பார்த்திருக்க, 0.50 சதவிகிதம் வரை குறைத்து இன்ப அதிர்ச்சி தந்தார் ஆர்.பி.ஐ. கவர்னர் சுப்பாராவ். இந்த வட்டிவிகிதம் குறைக்கப்பட்டதன் பின்னணியையும், இதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது பற்றியும் சென்னை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் ஸ்ரீனிவாசனிடம் பேசினோம். விரிவான விளக்கங்களுடன் நமக்கு பதில் அளித்தார். ''ஒரு பொருளாதாரம் தொடர்ந்து வளர வேண்டு மெனில் சீரான பணவீக்கம் அவசியம். குறைவான பணவீக்கமும், அதிகமான பணவீக்கமும். . .