பிரிந்து வாழும் பெண்ணுக்கு கணவர் சொத்தில் உரிமை உண்டா?
பொதுத் துறை நிறுவனத்தில் வேலை செய்கிறேன். பென்ஷன் கிடையாது. மாதா மாதம் எஸ்.ஐ.பி. முறையில் 10,000 ரூபாய் முதலீடு செய்ய விரும்புகிறேன். பென்ஷன் திட்டங்களைப் போல பாதுகாப்பான ஃபண்டுகளைப் பரிந்துரைக்கவும். ஜானகிராமன், நெய்வேலி. ராமகிருஷ்ணன் வி.நாயக், முதன்மை துணைத் தலைவர், பஜாஜ் கேப்பிட்டல். ''மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் பென்ஷன் திட்டங்களும் உள்ளன. அவற்றில் முதலீடு செய்வதும் சிறப்பானதுதான். யூ.டி.ஐ, ஃபிராங்க்ளின் டெம்பிள்டன் போன்ற ஃபண்ட் நிறுவனங்கள் வழங்கும் பென்ஷன் திட்டங்களைத் தேர்ந்தெடுக்கலாம். இவை பேலன்ஸ்டு ஃபண்டுகள் என்பதால் ரிஸ்க் குறைவு. பென்ஷன் திட்டங்களில் சுமார் 11-12% வருமானம் எதிர்பார்க்க முடியும். இதைவிட அதிக வருமானம் பெற விரும்பினால் ஹெச்.டி.எஃப்.சி. டாப் 200, ஐ.சி.ஐ.சி.ஐ. ஃபோகஸ்டு புளூசிப், பிர்லா டிவிடெண்ட் யீல்ட் போன்ற ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டுகளிலும் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்யலாம். ஆனால், இவற்றில் ரிஸ்க் சற்று அதிகம். பென்ஷனுக்கான பணம் சேர்ந்தபிறகு இந்த ஃபண்டுகளின் யூனிட்களை விற்று ஃபிக்ஸட். . .