தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் தஞ்சாவூர் மாவட்டம், நெசவுத் தொழிலுக்கும் பெயர் போனது. ஒரு காலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நெய்த பருத்தி புடவைகள் மிகவும் பிரபலமாக இருந்தது. கிராமங்களில் வாழும் கைவினைக் கலைஞர் களுக்குப் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் ஸ்ரீஜித் பணி செய்து கொண்டிருந்தபோது, அரசு அலுவலர் ஒருவருடன் தஞ்சாவூர் மாவட்ட கிராமங் களில் உள்ள பல்வேறு நெசவுத் தொழிலாளர்களைச் சந்தித்தார். அந்த நெசவாளர்கள் மிக நலிந்த நிலையில் இருந்தனர். அவர்கள் உருவாக்கிய சேலை கள் விற்காததால் மிகவும் சோர்ந்து போயிருந்தனர். நெசவுத் தொழிலுக்கு எந்த எதிர்காலமும் இல்லை என்ற விரக்தியில் இருந்தனர். அப்படி ஒரு கிராமத்தைப் பார்த்துவிட்டு திரும்பும்போது, அங்கு வசித்த நெசவாளர்கள் விசிட்டிங் கார்டு ஒன்றை எடுத்துவந்து அவரிடம் நீட்டினார்கள். 'தம்பி, உங்களை மாதிரி கொஞ்ச. . .