சென்னை நீலாங்கரையைச் சேர்ந்த பாலமுருகனின் (வயது 35) மாதச் சம்பளம் 70,000 ரூபாய். இதில், குடும்பச் செலவு, கல்விச் செலவு மற்றும் இன்ஷூரன்ஸுக்காக 16,200 ரூபாய் செலவு செய்கிறார். 37,500 ரூபாயை வீட்டுக் கடனுக்கான இ.எம்.ஐ. கட்டி வருகிறார் (இன்னும் 20 ஆண்டுகள் கட்ட வேண்டும்!). ஐந்து மியூச்சுவல் ஃபண்டுகளில் தலா ஆயிரம் ரூபாயும் முதலீடு செய்து வருகிறார். ''இதெல்லாம் போக எதிர்கால சேமிப்புக்காக கையில் மீதமிருப்பது 11,300 ரூபாய்தான்'' என்றவர் தன் எதிர்காலத் தேவைகளைப் பட்டியலிட்டார். ''என் மகன் நவீன்குமாரை கல்லூரியில் சேர்த்து பட்டதாரியாக்க 9 வருஷம் கழிச்சு 12 லட்சம் ரூபாய் தேவை. அவனுக்கு 24 வயசுல கல்யாணம் செய்து வைக்க 25 லட்சம் ரூபாய் தேவை. மகளுக்கும் சிறப்பானதொரு கல்வியைக் கொடுக்க, பதினான்கு வருஷம். . .
செய்வீர்கள் என நம்புகிறோம்.