''பணத்தை இறுக்கிக் கட்டிப் பிடித்துக்கொண்டு அது நம்மோடுதான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. பணத்தை சுதந்திரமாகச் செயல்பட விடவேண்டும். அப்போதுதான் அது நம்மைத் தேடி வந்துகொண்டே இருக்கும். நம் பணம் நம்மை விட்டு எங்கும் போய்விடக்கூடாது என்று கட்டுப்பெட்டித்தனமாக இருப்பவர்கள் வளர மாட்டார்கள் என்பது என் அனுபவம். ஒருவரிடம் பணம் இல்லாமல்கூட இருக்கலாம்; ஆனால், பணத்தை வரவழைப்பதற்கான ஐடியா இருக்க வேண்டும். இதுதான் பணம் பண்ணுகிற கான்செப்ட். இதைப் புரிந்துகொண்டு செயலாற்றினால் பணம் எப்போதும் நம்மிடம் இருந்துகொண்டே இருக்கும். சம்பாதித்ததைப் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டு ஒரு ரிஸ்க்கும் எடுக்காதவர்கள் பணத்தின் ருசியை ஒருபோதும் அனுபவிக்க மாட்டார்கள். விதைத்தால்தான் அறுக்க முடியும், இறைத்தால்தான் பொறுக்க முடியும். ரிஸ்க் எடுத்து பணத்தைப் போட்டால்தான் அது. . .