இன்று... ஒன்று... நன்று...!
விகடன் வாசகர்கள் எல்லாருக்கும் என் பணிவான வணக்கமுங்க... இப்பப் பார்த்தீங்கன்னா... போற போக்குல நாம கேட்குற, பாக்குற பல சங்கதிகள்தான் நிறைய விஷயங்களை நமக்குப் புரியவைக்கும். வெள்ளாங்கோவில்ல நான் பள்ளிக்கூடம் படிச் சுட்டு இருந்தப்ப தினமும் கோனார் கடையில மிட்டாய் வாங்கித் திம்பேன். அந்த கோனார் மூலமாத்தான் இறப்பைத் தள்ளிப்போடுறது எப்படினு தெரிஞ்சுக்கிட்டேன். அதை உங்களுக்கும் சொல்றேன்... பாரதிபுரத்துல வெவரம் தெரிஞ்ச பையனா இருந்தப்ப ஒரு சம்பவம்... நாச்சிமுத்துனு நமக்குத் தெரிஞ்சவர்... கொஞ்ச நேரத்துலயே மனுஷனோட ரெண்டு ரூபத்தையும் காமிச்சார். அப்பதான் நமக்கு ஒரு பிரச்னை வந்தா, அதை ஒரு மூணாம் மனுஷன்கிட்ட விடணும்னு புரிஞ்சுக்கிட்டேன். அந்த மூணாம் மனுஷன் யார்னு உங்களுக்குப் புரியவைக்கிறேன்... அப்புறம் நம்ம கவுண்டமணி, சுந்தர்ராஜன்ல்லாம் 'ஆல் இன் ஆல்’ அழகுராஜானு ஒரு கேரக்டரை வெச்சு வித்தை காட்டிட்டு இருப்பாங்க. அவர் வேற யாரும் இல்லை... நம்ம ஃப்ரெண்டுதான். அவர் ரொம்ப சுவாரஸ்யமான கேரக்டர்... அவர் இருந்தா. . .