இயற்கை வேளாண்மைச் சான்றிதழ் வேணுமா?
ரசாயனங்களால் விளைந்த விபரீதங்களைக் கண்கூடாகக் கண்டு அனுபவித்த பிறகு, உலகமே இப்போது இயற்கையை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக, இயற்கை விளைபொருட்கள் மீதான விழிப்பு உணர்வு அதிகரித்துக் கொண்டே வருவதால்... இயற்கைப் பொருட்களுக்கான தேவை பெருகிக்கொண்டே இருக்கிறது. இத்தகையச் சூழலில், 'இயற்கை முறையில் விளைந்தது எது? ரசாயன முறையில் விளைந்தது எது?’ என்று நுகர்வோர் கண்டுபிடிப்பது கடினம் என்பதால், பல இடங்களில் போலிகளும் புழங்கத் தொடங்கியிருக்கின்றன. இந்நிலையில், இத்தகையப் போலிகளால் இயற்கை விவசாயிகள் மற்றும் நுகர்வோர் என இரு தரப்புமே பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், இயற்கை முறையில் விளைந்தவற்றுக்கு 'அங்கக விளைபொருட்கள்’ என்ற சான்றிதழை அளித்து வருகிறது, தமிழக வேளாண்மைத் துறையின் ஒரு அங்கமான 'விதைச் சான்றளிப்பு மற்றும் அங்ககச் சான்றளிப்பு இயக்ககம்’. இதனால், இயற்கை விளைபொருட்களுக்கு. . .