# காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த புதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு # பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி # குருநாத் மெய்யப்பன் சார்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விண்டூ தாரா சிங் தகவல் # மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து # என்.எல்.சி நிறுவன பங்குகளை விற்க வைகோ எதிர்ப்பு # கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவுப் நீக்கம் # மத்திய அமைச்சர், காங்கிரஸ் எம்.பி.க்கு பிடிவாரண்ட் # வருகிறது அ.தி.மு.க. நேர்காணல் - ஹிட் லிஸ்டில் ஐந்து அமைச்சர்கள் #


Comment count11
save
print A+     A-
'தானே' துயர் துடைத்தோம்!

களத்தில் விகடன்
விகடன் தானே துயர் துடைப்பு அணி

புயலோ, பூகம்பமோ அந்த மக்களைத் தாக்கவே தேவை இல்லை. எப்போதுமே அப்படித்தான் இருக்கிறார்கள். இருக்க இடம் இல்லாமல்... நகரைவிட்டு விலகி,  ஓரமான ஒரு பகுதியில், மண் வீடுகளும் ஓலைக் குடிசைகளுமாக வாழ்ந்துவருகிறார்கள். 'வாழ்ந்து’ என்று சொல்வதுகூட அடையாளத்துக்காகத்தான், நாட்களைக் கழித்துவருகிறார்கள்!

 கடலூரில் இருந்து நெடுஞ்சாலையை விலக்கிச் சென்றால், கொஞ்சம் மேடு, ஆறு... சிறு மலை அடிவாரத்துக்குக் கீழே இருக்கிறது புது நகர். யார் இந்தப் பெயரை வைத்தது என்று தெரியவில்லை. புதுசு எதற்குமே வழி இல்லாமல் அரதப் பழசான வாழ்க்கைதான் அந்த மக்களுக்கு வாய்த்து இருக்கிறது.

அரை நூற்றாண்டு அடைந்த பலாவையும் கால் நூற்றாண்டைக் கடந்த முந்திரியையுமே 'தானே’ தாக்கித் தகர்த்துவிட்டது என்றால், புதுநகர் வாசிகளின் கூரைகள் எம்மாத்திரம்? அந்த நாளில் அத்தனை கூரைகளும் காற்றினால் கடத்திச் செல்லப்பட்டுவிட்டன. வானத்தையே மேல் கூரையாக்கி வாழ்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி இல்லை. 'கையது கொண்டு மெய்யது பொத்தி...’ என்பது பெருமையாகச் சொல்லக் கூடியதா என்ன?

புது நகர் மக்களுக்குச் சொந்தமாக மனை கிடையாது. விவசாயம் பார்க்க நிலம் கிடையாது. நிரந்தரமான வேலை இல்லை. ஏனென்றால், அதற்கான படிப்பு இல்லை. அன்றாடம் கிடைக்கும் கூலி வேலைக்குச் செல்கிறார்கள். அதுவும் கிடைக்காத அன்று, குப்பை பொறுக்கப் போகிறார்கள்.

இப்படி ஒரு ஊர் இருக்கிறது என்று கேள்விப்பட்ட மறு தினமே நமது அணி அந்த இடத்துக்குச் சென்றது. அவர்களுக்கு என்ன தேவை என்பதை அவர்களிடம் கேட்காமலேயே அறிய முடிந்தது. பழைய துணி மூட்டையைத் தலைக்குவைத்து... சாக்குப் பையை விரித்துப் படுக்கிறார்கள். அவர்கள் கட்டி இருந்த துணிகள் மிக மோசமான நிலையில் இருந்தன.  செங்கற்களைவைத்து விறகு மூட்டி... சமையல் செய்துகொண்டு இருந்தார்கள். சாப்பிட நல்ல தட்டு இல்லை. தண்ணீர் சேகரித்துவைக்கும் குடங்கள் ஒழுகும் நிலையில் ஒட்டுப் போடப்பட்டு இருந்தன. ''ரேஷன் கார்டு... ஸ்கூல் சர்ட்டிஃபிகேட்... கவர்மென்ட் லெட்டரு... இதை எல்லாம் விடுங்க... எங்க கல்யாணப் பத்திரிகையைக் கூடப் பத்திரமா வெச்சிருக்க எங்களுக்கு எந்த வசதியும் இல்ல'' என்று வேதனை பகிர்ந்தார் ஒரு பெண். 'விகடன் துயர் துடைப்பு அணி’ இதுவரை பார்த்த ஊர் களிலேயே மிகமிக மோசமான நிலையில் புது நகர் இருப்பதை உணர முடிந்தது.

மொத்தம் 212 குடும்பங்கள். அவர்களின் உடனடித் தேவைகள், அத்தியாவசியத் தேவைகள் ஆகியவற்றைப் பட்டியல் இட்டோம். அத்தனை பொருட்களையும் அந்த மக்களுக்கு வாங்கித் தருவது என்று முடிவெடுத்தோம்.

மண்ணெண்ணெய் பம்ப் ஸ்டவ், குடம், வாளி, சாப்பாட்டுத் தட்டு, டம்ளர்கள், தலையணை, போர்வைகள், சேலைகள், லுங்கி, பிளாஸ்டிக் பாய்... இவற்றுடன் பெரிய டிரங் பெட்டி ஆகிய பொருட்கள் அடங்கிய ஒரு செட் 3,000 ரூபாய். இந்தப் பொருட்களை சென்னை சரவணா ஸ்டோரில் வாங்கினோம். ''தானே துயர் துடைப்புக்கான சேவை மனப்பான்மையுடன் இந்தப் பொருட்கள் வாங்கப்படுவ தால் எங்களால் முடிந்த உதவி'' என்று குறிப்பிட்ட தொகையைத் தள்ளுபடி செய்தது அந்த நிறுவனம். சென்னையில் இருந்து இரண்டு லாரிகளில் இந்தப் பொருட்கள் புது நகர் எடுத்துச் செல்லப்பட்டு ஏப்ரல் 13-ம் தேதி விநியோகிக்கப்பட்டன. அந்த சுபதினத்தில் புது நகர் மக்களின் முகத்தில் புன்னகை பூத்தது.

''எல்லாரும் வந்து பார்த்துட்டுப் போவாங்க. ஆனா, 'விகடன்’ மட்டும்தான் எங்களுக்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் கொடுத்திருக்கு. தாய் வீட்டுல இருந்து வந்த சீதனம் மாதிரி இருக்கு!'' என்றார் ஜெயந்தி.

''இந்த டிரங்குப் பெட்டி வந்த நேரமாவது நாலு காசு சேரணும்!'' என்று சொல்லிச் சிரித்தார் கிருஷ்ணவேணி.

''ஒரு குடும்பத்துக்கு எதுவெல்லாம் தேவையோ... அதை எல்லாம் பார்த்துப் பார்த்து வாங்கி இருக்கீங்க. மண்ணெண்ணெய் ஸ்டவ் கொடுத்ததுல எங்களோட முக்கால்வாசிப் பிரச்னை தீர்ந்துபோச்சு. எங்க வாழ்க்கை நிலை மாறிடும்!'' என்று நம்பிக்கையுடன் பேசினார் கண்ணன்.

விகடன் வாசகர்களின் எண்ணமும் அதுதான்!


[ Top ]
Kalidas1 Years ago
ஸ்த்ய சாயி பாபாவின் போதனைகலை ஆனந்தவிகடன் செயல்முரைக்கு கொன்டு வருவதை குரிது மிகவும் பாராட்டுக்கல்.
avsuresh1 Years ago
Keep up your good work, Vikatan!
Muralidharan S1 Years ago
Good Work
Karthik1 Years ago
We love you Vikatan for your responsible work..Hats off to you!!
Manikandan1 Years ago
Good work. It's not easy to properly give a helping hand to the right needy people. Its a challenging. Hats off to Vikatan team.
Balu1 Years ago
இங்கே பாருங்க.. அவ்வளவு கமெண்டு வரவேயில்லை.. பாராட்டில் சிக்கனம்.. எவ்வளவு நேர்த்தி பாருங்க.. எவனையாவது திட்டணும்ன்னா அவனவன் வரிஞ்சு கட்டிக்கிட்டு வாய்கிழிய கை நோக எழுதறாய்ங்க.. ஆங்.. அப்பூறம்ன்னு புரட்டிட்டு போயிட்டாங்க..இங்க வந்தா மாத்திரம்..
vijay1 Years ago
Great and good work Vikatan Team
usha1 Years ago
இவர்களை கண்டுபிடித்து,அருமையாக தேவையானவைகளை வழங்கிய விகடனுக்கு பாராட்டுக்கள்.....
prathab1 Years ago
இந்த அளவுக்கு மக்கள் இருக்கிறார்கள் என்றால் இவ்வளவு நாள் அரசாங்கம் என்ன செய்து கொண்டு இருந்தது.......அரசின் நலத்திட்டங்கள் யாருக்கு போய் சேருகின்றன??????????
guru1 Years ago
U Guys are simply great
Nandakumar1 Years ago
Good work.
Displaying 1 - 11 of 11
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
02-மே -2012
சென்ற இதழ்
25-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices