''ஒரு பத்திரிகையில் 'சிரஞ்சீவி தம்பி பவன் கல்யாண் நல்ல கதை தேடிக்கிட்டு இருக்கார்’னு ஒரு பெட்டிச் செய்தி படிச்சேன். உடனே ஹைதராபாத் கிளம்பிப் போய் அவரைப் பார்த்து கதை சொன்னேன். எதுவும் சொல்லாம, கட்டிப் பிடிச்சுக்கிட்டார். அப்படிக் கிடைச்சது தான் 'தொலி பிரேமா’ வாய்ப்பு. அடுத்தடுத்து தெலுங்கில் 13 வருஷத்துல எட்டுப் படங்கள். ஹிட் டைரக்டர்னு பேர் கிடைச்சது. என்ன... சினிமாவில் வரும் ஒரே பாட்டு... ஓஹோ வளர்ச்சி மாதிரி நாலே வரியில் சொல்லிட்டேனா என் கதையை!'' - கண் சிமிட்டிச் சிரிக்கிறார் கருணாகரன். தெலுங்குப் படவுலகில் வெற்றியைக் குத்தகைக்கு எடுத்த தமிழர். இரண்டு தேசிய விருதுகள், நான்கு மாநில விருதுகளுக்குப் பிறகு 'ஏனென்றால்... காதல் என்பேன்’ மூலம் தமிழில் கதை சொல்ல வந்திருக்கிறார். ''தேவகோட்டைக்காரன் நான். பாலிடெக்னிக். . .