பிளாட்டினம்: மின்னும் வெள்ளைத் தங்கம்!
தங்கத்தைவிட அதிக மதிப்பு கொண்டவை வைரமும், பிளாட்டினமும்தான். இதில் வைரத்தின் விலை மிக அதிகம். ஆனால், பிளாட்டினத்தின் விலை இன்றைக்கு தங்கத்தைவிட குறைவாக உள்ளது. இதனாலேயே பலரும் பிளாட்டினம் நகைகளை வாங்கத் தொடங்கி இருப்பது ஆச்சரியம் தரும் வளர்ச்சி. கடந்த அட்சய திருதியை அன்று பிளாட்டினம் நகைகளின் விற்பனை 25% அதிகரித்துள்ளதே இதற்கு ஒரு சான்று. திடீரென பிளாட்டினத்துக்கு மவுசு வர என்ன காரணம், தங்கம் போல பிளாட்டினமும் முதலீடு செய்வதற்கு ஏற்றதுதானா என்கிற கேள்விகளுக்கு பதில் காணும்முன், பிளாட்டினத்தின் வரலாற்றை சுருக்கமாகப் பார்த்துவிடலாம். பிளாட்டினத்தின் கதை! கி.மு. 700-ம் ஆண்டிலேயே வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது இந்த பிளாட்டினம். பதினாறாம் நூற்றாண்டில் ஸ்பானிஷ் நாட்டில் பிளாட்டினத்தின் பயன்பாடு பெரிய அளவில் உருவானது. ஸ்பானிஷ் மக்கள் அதை பிளாட்டினா. . .