ஒருவர் ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசிகூட இல்லாமல் இருப்பது எவ்வளவு பெரிய தவறோ; அதைவிட பெரிய தவறு, அளவுக்கு அதிகமான இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்து வைத்திருப்பது. நிறைய இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுப்பதன் மூலம் ஒருவர் தனது வாழ்க்கையை வலிமையாக காப்பீடு செய்திருப்பதாக நினைக்கிறார். ஆனால், அவர் பணம் எந்த பிரயோஜனமும் இல்லாமல் வீணாக போய்க் கொண்டிருக்கிறது என்பது அவருக்குத் தெரிவதே இல்லை. ''உள்ளபடி ஒருவர் எத்தனை இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுக்கலாம்?'' என நிதி ஆலோசகர் சங்கரிடம் கேட்டோம். வாசகர்கள் பலருக்கும் இருக்கும் இந்த சந்தேகத்துக்குத் தெளிவான பதிலைச் சொன்னார் அவர். முதலீடல்ல..! ''இன்ஷூரன்ஸ் தொடர்பான குழப்பங்கள் மக்களிடம் தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கின்றன. இன்ஷூரன்ஸ் பாலிசி என்பது ஒருவரின் வருமானம் தடைபடும் நிலையில், அவரைச் சார்ந்தவர் கள் தொடந்து பணப்பலன்களை அனுபவிக்க மட்டும்தான். ஆனால், நம் மக்களில் பலர் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை ஒரு முதலீடாகவே பார்க்கிறார்கள். இதனால் நிறைய பாலிசிகளை எடுத்துத் தள்ளுகிறார்கள். ஒருவர். . .
This article reaches me at right time. Thanks again.