நம் முதலீடு மோசம் போகாமல் பாதுகாப்பாகவும், அதே நேரத்தில் ஓரளவுக்கு வருமானமும் கிடைத்தால் நல்ல விஷயம்தானே! அப்படிப்பட்ட எதிர்பார்ப்பைக் கொண்டதுதான் பிர்லா சன் லைஃப் டைனமிக் பாண்ட் ஃபண்ட். இதன் பெயரில் பாண்ட் என்று இருந்தாலும், இது ஒரு இன்கம் வகையைச் சார்ந்த ஃபண்டாகும். சந்தையில் இருக்கும் அனைத்து இன்கம் ஃபண்டுகளிலும் இதுதான் மிக அதிகமான தொகையை, அதாவது ரூ.5,348 கோடியை நிர்வாகம் செய்கிறது. இதன் ஃபண்ட் மேனேஜர் மனீஷ் டாங்கி (Maneesh Dongi) ஆவார். பொதுவாக வட்டி குறையும் காலங்களில் கடன் சார்ந்த திட்டங்கள் நன்றாகச் செயல்பட்டு அதிக வருமானத்தைத் தர வல்லமை கொண்டவை. வட்டி விகிதம் ஏறும் காலங்களில் அதற்கு எதிர்மாறாகச் செயல்படும். இது போன்ற ஃபண்டுகள் வட்டி ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப தங்களது போர்ட்ஃபோலியோவில் உள்ள கடன் பத்திரங்களின் மெச்சூரிட்டியைமாற்றி டைனமிக்காகச் செயல்படுவதன் மூலம் அதிக வருமானத்தை ஈட்ட முயற்சிக்கும். தற்போது வட்டி விகிதம் குறைந்து கொண்டிருக்கிற. . .