எக்ஸாம் என்றாலே நம் மாணவர்களில் பலர் பரபரத்து விடுகிறார்கள். அதுவும், கணிதம், அறிவியல் பாடங்கள் என்றால் ரொம்பவுமே ரிஸ்க் எடுப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், புதன் கிரகத்தின் அனுக்கிரகம் இருந்தால் அறிவியல், கணிதப் பாடங்கள் எல்லாம் எளிதாகிவிடும் என்கிறார் டாக்டர் பாஸ்கரன் பிள்ளை. ராமேஸ்வரத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர், ஆன்மிகத்தையும் அறிவியலையும் இணைக்கும் முயற்சியில் ஆர்வம் கொண்டவர். மேலும், 'மைண்ட் சயின்ஸ்’ என்ற கருத்தாக்கத்தை உருவாக்கி, 20 ஆண்டுகளுக்கும் மேலாக மனித மனத்தை நுணுக்கமாக ஆராய்ந்து வருபவர்... 'வேர்ல்ட் நாலெட்ஜ் ஃபாரம்’ என்ற அமைப்பின் சார்பில் சொற்பொழிவுகள் நிகழ்த்தி வருபவர்... ஆங்கில இலக்கியத்திலும், இலக்கிய ஒப்புநோக்குப் பார்வையிலும் பட்டங்கள் பெற்றவர், அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் பிஹெச்.டி., பட்டம் பெற்றவர்... என்று இவரைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். சென்னை அண்ணா நகரில் இவர் நடத்தி வரும் ஆஸ்ட்ரோ-வேத் அமைப்பு உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சிக்களமாகச் செயல்படுகிறது. ஒருவர் கற்கும் கல்விக்கும், விண்ணில் உலவும் கிரகங்களுக்கும் சம்பந்தம் இருப்பதாகச். . .