சென்னை அசோக்நகர்- சாமியார்தோட்டம் பகுதியில் இருந்தபடி தன்னை நாடி வருவோருக்கெல்லாம் பொன்னையும் பொருளையும் வாரி வழங்கி, நிம்மதியையும் சந்தோஷத்தையும் தந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள் ஸ்ரீகருமாரி திரிபுரசுந்தரி அம்மன்! சுமார் 50 வருடங்களுக்கு முன் இலந்தை மர நிழலில் சூல வடிவினளாக அருள்பாலித்து வந்தாளாம் ஸ்ரீகருமாரி திரிபுரசுந்தரி. பிறகு பக்தர் சக்தி சுந்தரேசன் மற்றும் அந்தப் பகுதி மக்களின் பெரு முயற்சியால் அழகிய கோயில் கட்டப்பட்டு, அங்கே விக்கிரகத் திருமேனியளாக குடியேறினாள் என்கிறார்கள். நான்கு திருக்கரங்களில் அபய- வரத முத்திரைகளும், சூலமும், உடுக்கையும் கொண்டு, ஒரு காலை தரையில் தொங்கவிட்டு, இன்னொரு காலை மடித்து, வீராசனத்தில் காட்சி தருகிறாள் ஸ்ரீகருமாரி திரிபுரசுந்தரி. தேவியின் சிரசுக்கு மேல் ஐந்துதலை நாகம் படமெடுத்து நிற்பது போன்ற அமைப்பு சிலிர்க்கச் செய்கிறது. இந்தக். . .