கணேஷ்குமார், திருமங்கலம். நடிகர் விஜய் கட்சி ஆரம்பிப்பாரா? அவரை முதலில் அவரது அப்பாவின் பிரச்னையைத் தீர்க்கச் சொல்லுங்கள். எந்த ஆட்சியைக் கொண்டுவர 'அணிலாக’ இருந்தார்களோ... அவர்களே முதுகில் தடவிக்கொடுக்காமல் முகத்தில் மூன்று நாமங்களைப் போட்டதை எதிர்த்து முதலில் விஜய் குரல் கொடுக்கட்டும். அப்புறம் ஆரம்பிக்கலாம் கட்சி! சீர்காழி சாமா, தென்பாதி. ஒரு அரசியல்வாதி பணம், புகழ், பதவி போன்றவற்றில் எதைப் பெரிதும் விரும்புவார்? முதலில் புகழ். அதன் மூலம் பதவியைக் கைப்பற்ற முனைவார்கள். அந்தப் பதவி, செல்வம் சேர்க்கும். எனவே மூன்றும் இணை பிரியாதவை. சேவை செய்வது பற்றி நீங்களே கேட்கவில்லை. சரிதான்! தி.கருணாநிதி, விழிதியூர். தொல்.திருமாவளவனின் கட்சியை விடுதலைச் சிறுத்தைகள் என்கிறார்கள். டி.பி.ஐ என்றும் சொல்கிறார்கள். இரண்டும் ஒன்றா? இல்லை. 'தலித் பேந்தர் ஆஃப் இந்தியா’. . .
எதிர்கட்சியாக இருக்கும் போது மட்டும், அதுவும் எம் பி பதவி மட்டும் இதில் விதி விலக்கு