''கணக்குப் புத்தகங்களைத் திருடினார் பாலமுருகன்!''
கடந்த ஜூ.வி. இதழில், 'பாண்டிராஜ் என்னை ஏமாற்றி விட்டார்’ என்று, வெளியிட்டு இருந்த கட்டுரை தொடர்பாக மேலும் சில தகவல்களைத் தெரிவிக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். ''நேர்மையும் திறமையையும் மட்டுமே நம்பி, திரைப்பட இயக்குநராக வளர்ந்தவன் நான். நல்லவர்கள் பலருக்கு இடையே தவறான சிலரை நம்பி, நொந்ததுதான் இப்போதையப் பிரச்னை. எனது, 'வம்சம்’ படப்பிடிப்பு நடந்த நேரத்தில், ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்வோம் என்று கூறி, பாலமுருகன் என்னிடம் 10 லட்ச ரூபாய் வாங்கி இருந்தார். அதை, இரண்டு வருடத்தில் லாபத்துடன் சேர்த்து 15 லட்சமாக எனக்குத் திருப்பித் தருவதாகவும் கூறி இருந்தார். அப்படி அவர் எனக்குத் தர வேண்டிய 15 லட்ச ரூபாயையும் சேர்த்துத்தான், 25 லட்ச ரூபாயை அவர் 'மெரினா’ படத்துக்கு செலவு செய்திருந்தார்.. . .