என் மகன் இவன்! நந்திதா தாஸ்
''என் குழந்தையோடதான் போட்டோவுக்கு போஸ் கொடுப்பேன். சினிமா இண்டஸ்ட்ரியில் ஹீரோக்கள் மட்டும் கல்யாணம் பண்ணி, பேரன் பேத்தி எடுத்த பிறகும் குடும்பப் பேட்டிகள் கொடுத்துட்டு ஸ்க்ரீன்ல டூயட் பாடுறாங்க. ஹீரோயின்களுக்கு அந்த உரிமை இல்லையா?'' - செல்லமாக அதட்டுகிறார் நந்திதா தாஸ். இயக்குநர் சீனு ராமசாமியின் 'நீர்ப் பறவை’ படப்பிடிப்புத் தளம். தூத்துக்குடி கடற் காற்று கேசம் கலைக்கிறது. இரண்டு வயது மகன் விஹான் விளையாடக் கிளம்ப, அவன் பின்னால் ஓடி ஆடி உற்சாகமாக இருக்கிறார் நந்திதா. ''செகண்ட் இன்னிங்ஸ்ல முதல் படமே தமிழ்ப் படம். எதுவும் விசேஷ காரணம் இருக்கா?'' ''2010-ல 'ஐ யம்’ படத்தில் நடிச்சப்ப, நான் அஞ்சு மாசக் கர்ப்பிணி. குழந்தை பிறந்த பிறகு, அவனைக் கவனிக்க மட்டுமே நேரம் இருந்தது. அதனால்,. . .