வேணாம் மச்சீஸ் வேணாம்... இந்த சிட்டி ஃபியரு !
முதல் தலைமுறையில் கல்லூரிக்குள் நுழைபவர்கள் தங்கள் மூதாதையர்களின் அழுகையையும் சேர்த்து அழுது கொண்டிருப்பார்கள்! - யுகபாரதியின் இந்த வரிகளில்தான் எத்தனை உண்மை! ஆனால்... திறமைக்கும், எல்லையில்லாத அறிவுத் தேடலுக்கும் நகரம், கிராமம் என்கிற வித்தியாசம் உண்டா என்ன?! 'நிச்சயமாக இல்லை!’ என கட்டை விரல் உயர்த்துகிறார்கள், கிராமப் பின்புலத்தில் இருந்து வந்து, சென்னைக் கல்லூரிகளில் சாதித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் சிலர். அவர்கள், தாங்கள் சந்தித்த சவால்களையும், அதை எதிர்கொண்ட விதத்தையும் இங்கு பேசுகிறார்கள்... வரப்போகும் கல்வி ஆண்டில் தங்களைப் போலவே கிராமத்தில் இருந்து கிளம்பி வர இருக்கும் தங்களின் ஜூனியர் தம்பி, தங்கைகளுக்காக! சத்யா, ஹவுஸ் சர்ஜன், ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி: ''நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவ நான். அரசுப் பள்ளியில படிச்சேன். ஸ்டான்லி கல்லூரிக்கு வந்தப்போ,. . .