நடிப்பு : ஐஸ்வர்யா கலை : ஸ்யாம் ஒளிப்பதிவு : கே.ராஜசேகரன் கதை, திரைக்கதை : தேவிபாலா இயக்கம் : நீங்களேதான் கத்தியுடன் ஆட்டோவில் ஆனந்த் பயணம்... துர்காவைக் கொல்லும் வெறியுடன் ! என்ன நடக்கப் போகிறது?! என்று முடிந்திருந்த கடந்த எபிசோட், கிளப்பிய பரபரப்பு... வாசகிகளிடம் நன்றாகவே பற்றிக் கொண்டுவிட்டது. ஒவ்வொருவருமே, தனித்தனியாக மெகா சீரியலுக்கு திரைக்கதை அமைத்து இயக்கும் அளவுக்கு... ஆர்வத்துடன் ஆளுக்கொரு ட்விஸ்ட் வைத்து, கதையை நகர்த்த போட்டி போட்டிருக்கிறார்கள் நம் வாசகிகள்! பெரம்பூர் - ஜெயசித்ரா, பூண்டி - கார்த்திகைச்செல்வி, சென்னை - திலகவதி... கத்தியைத் தொடர்ந்து இந்த மூன்று சகோதரிகளும் ஆஸ்பத்திரிக்குக் கதையைக் கொண்டு போகிறார்கள். ஆனால், வித்தியாசமாக வரவில்லை. கப்பலூர் - ஜெயசித்ரா, இந்த சகோதரி... முறையே துர்கா,. . .