''உலகம் எவ்வளவு விரிந்துகொண்டே போனாலும், வாழ்க்கையும் அதன் மீதான பிடிப்பும் சுருங்கிக் கொண்டே போகிறது. முன்பெல்லாம் எல்லாத் துக்கும் வயது வரம்பு இருந்தது. இப்போது அதுக்கு வந்துடுச்சு பை பை!' - வீட்டுக்கு வெளியே பட்டாம்பூச்சிபோல விளையாடிக் கொண்டிருந்த ஹர்ஷிதா மேக்டம், 'பேட்டி' என்று வந்தமர்ந்ததும் படைப்பாளியாக மாறி, தத்துவமாகப் பேசப்பேச... நமக்கு அந்த நொடியில் இருந்தே ஆரம்பம்... ஆச்சர்யம்! பைஜாமா - குர்தா, ஜோல்னா பை, நரைத்த தலை, மூக்குக் கண்ணாடி, 24x7 சீரியஸ் முகம்... இப்படியெல்லாம் நாம் பார்த்துப் பழகிய எழுத்தாள முகங்களுக்கு நடுவே, அழகிய முரண்... இந்த ஹர்ஷிதா மேக்டம், இந்தியாவின் இளம் ஆங்கில நாவலாசிரியை! 'ரூபி ரஷ்'(Ruby Rush)'அல்மோஸ்ட்... டெஸ்பெரேட்' (almost... Desperate) என்ற 2 படா நாவல்களை எழுதிய 14 வயதான. . .